மாநாடு படத்தின் காட்சிகள் மீண்டும் படமாக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Maanadu Re-Shooting Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் அடுத்ததாக மாநாடு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

மீண்டும் படமாக்கப்படும் மாநாடு, வெளியான ஷாக் தகவல் - என்ன காரணம் தெரியுமா??

வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். மேலும் எஸ் ஜே சூர்யா வில்லனாக நடிக்கிறார். எஸ் ஏ சந்திரசேகர், பாரதிராஜா மற்றும் பலர் இந்த படத்தில் நடித்து வருகிறார். ‌

இந்த நிலையில் தற்போது கொரானாவுக்கு முன்பு எடுக்கப்பட்ட சிம்புவின் காட்சிகள் மீண்டும் படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அந்த காட்சிகளில் சிம்பு கொஞ்சம் குண்டாக இருந்ததால் உருவ வேறுபாடு இருக்கும் என்பதால் ரீ ஷூட் செய்யும் வேலையில் இறங்கியுள்ளார் வெங்கட் பிரபு.