இது என்னங்க நியாயம் என தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து ட்விட்டரில் கொந்தளித்துள்ளார் மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.

Maanadu Producer Against on Tamilnadu Govt Rules : சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகள் அனைத்தையும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியது. இந்த வைரஸ் தொற்றால் இந்தியாவும் கடுமையாக பாதிக்கப்பட்டு பொருளாதாரத்திலும் பின்னடைவை சந்தித்தது. தற்போது கொஞ்சம் கொஞ்சமாக அதிலிருந்து மீண்டு வந்து கொண்டிருக்கிறோம்.

முழுவதுமாக மீண்டு வர அனைவரும் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொள்ள வேண்டும் என்று மத்திய மாநில அரசுகள் வலியுறுத்தி அதற்கான செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறது.

முதல்வர் ஸ்டாலின் தலைமையில், இன்று எம்பிக்கள் கூட்டம் : முக்கிய தீர்மானம்..

இந்த நிலையில் தடுப்பு ஊசி செலுத்தி கொள்வோரின் எண்ணிக்கை அதிகரிக்க தமிழக அரசு நவம்பர் இருபதாம் தேதி முதல் பொது இடங்களாக கருதப்படும் திரையரங்கம், மால், பார்க் உள்ளிட்ட இடங்களுக்கு செல்வதற்கு கட்டாயம் தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. இதனால் திரையரங்குகளில் படம் பார்க்கச் செல்பவர்கள் கண்டிப்பாக தடுப்பு ஊசி செலுத்தி இருக்க வேண்டும் என்ற உத்தரவு அமலாகியுள்ளது.

Nadigar Sangam பொதுக்குழுவை அங்க கூட்டி இருக்கலாம்! – Actor Sathish Funny Speech | Rajavamsam

இதுகுறித்து தற்போது மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் உலகத்திலேயே திரையரங்கிற்கு செல்ல தடுப்பூசி கேட்பது இங்கு தான் முதல்முறை… அவனவன் சுதந்திரத்தில் தலையிடுவது எவ்வளவு பெரிய மனித உரிமை மீறல்?? முன்பு போலவே திரையரங்கிற்குள் மக்களை அனுமதிக்க வேண்டும் என்று தன்னுடைய எதிர்ப்பையும் வேண்டுகோளையும் பதிவு செய்துள்ளார்.

சுரேஷ் காமாட்சி அவர்களின் கோரிக்கைக்கு தமிழக அரசு செவி சாய்க்குமா என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.