மாநாடு படத்துக்காக திரையரங்குகளில் வைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய பேனர்களில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.

Maanadu Movie Banners in Theatres : தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி திரையுலகில் பல்வேறு படங்களில் நடித்து வந்த இவர் காதல் அழிவதில்லை என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதன் பின்னர் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். இறுதியாக இவரது நடிப்பில் ஈஸ்வரன் திரைப்படம் வெளியானதை தொடர்ந்து அடுத்ததாக வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள மாநாடு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

ஓய்வு பெறுகிறேன் : விரக்தியடைந்த கிரிக்கெட் வீரர்

மாநாடு படத்திற்கு இப்போதே வைக்கப்பட்ட மிகப் பெரிய பேனர்.. தயாரிப்பாளர் வெளியிட்ட புகைப்படம்

இந்த படத்தினை சுரேஷ் காமாட்சி தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சில காரணங்களால் இந்த படம் நவம்பர் 25ஆம் தேதிக்கு தள்ளி போய் உள்ளது.

பிரபல Model-கள் பங்கேற்ற கொண்ட Fashion Show 2021 | Tiki Tako Grand Launch | HD

இப்படியான நிலையில் மாநாடு படத்திற்காக திரையரங்குகளில் வைக்கப்பட்டுள்ள பேனர்களின் புகைப்படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் இதெல்லாம் சும்மா டிரெய்லர் தான் படம் ரிலீஸ் ஆகட்டும் தெறிக்க விடுவோம் எனக் கூறி வருகின்றனர்.