Maanaadu Shooting
மாநாடு ஷூட்டிங் தொடங்குவது எப்போது என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்துள்ளார்.

Maanaadu Shooting Start Date : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் சிம்பு பல்வேறு சர்ச்சைகளுக்கும் பிரச்சனைகளுக்கும் பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக உள்ள மாநாடு படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் ஜனவரியில் தொடங்கும் என கூறப்பட்டு பின்னர் மீண்டும் தள்ளி போனது. சிம்புவின் பிறந்தநாளுக்கு பிறகு தொடங்கும் என கூறப்பட்டது.

இந்நிலையில் ஷூட்டிங் தொடங்க உள்ள தேதியை அறிவித்துள்ளார் சுரேஷ் காமாட்சி. வரும் பிப்ரவரி 19-ம் தேதி முதல் மாநாடு படப்பிடிப்பு மாஸாக தொடங்கும் என அறிவித்துள்ளார்.

பிப்ரவரி 19-க்கு 10 நாள் இருக்கே அவ்வளவு நாள் கேப்பா என சிம்பு ரசிகர்கள் ஆதங்கப்படுகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.