Maanaadu Shooting Spot Stills

மாநாடு படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து புதிய புகைப்படம் ஒன்றை வெங்கட் பிரபு வெளியிட்டுள்ளார்.

Maanaadu Shooting Spot Stills : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் மாநாடு என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.

வெங்கட் பிரபு இயக்கி வரும் இந்தப் படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். மேலும் இப்படத்தில் நாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க எஸ் ஜே சூர்யா, பாரதிராஜா, மனோஜ் பாரதிராஜா, எஸ்ஏ சந்திரசேகர் உட்பட பல நடிகர்கள் முக்கிய வேடங்களில் இணைந்து நடித்து வருகின்றனர்.

இவர்களுடன் தற்போது சென்னை 28 பட புகழ் ஆகாஷ் நடித்து வருகிறார். சிம்பு வெங்கட் பிரபு மற்றும் ஆகாஷ் ஆகியோர் இணைந்து எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படத்தை வெங்கட் பிரபு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்

இந்த புகைப்படத்தில் சிம்புவின் லுக் செமயாக இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.