Maanaadu Shooting Spot Accident
Maanaadu Shooting Spot Accident

மாநாடு படப்பிடிப்பில் நடந்த விபத்து காரணமாக தற்போது அறுவைச் சிகிச்சை செய்து கொண்டுள்ளார் பிரபல நடிகர்.

Maanaadu Shooting Spot Accident : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாநாடு. இந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைக்க வெங்கட்பிரபு இயக்குகிறார்.

படத்தில் பாரதிராஜா, மனோஜ் பாரதிராஜா, விஜய் தந்தை எஸ்ஏ சந்திரசேகர், ஆர்கே சுரேஷ், யோகி பாபு, கருணாகரன் என பலர் நடித்து வருகின்றனர். சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட போது எதிர்பாராத நேரத்தில் ஏற்பட்ட விபத்தில் கருணாகரன் சிக்கியுள்ளார்.

இந்த விபத்து நடந்து நீண்ட நாட்களாகி விட்ட நிலையிலும் தொடர்ந்து காலில் வலி இருந்து கொண்டே இருந்ததால் மருத்துவமனையில் பரிசோதனை செய்துள்ளார்.

கொரோனாவை பொருட்படுத்தாமல் துருக்கியில் பிரபல தமிழ் நடிகரின் ஹிந்தி படஷூட்டிங்!!

காலில் மூட்டு அருகே உள்ள ஜவ்வு கிழிந்து இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனையடுத்து கருணாகரனுக்கு காலில் சிறிய அறுவைச்சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தற்போது மருத்துவமனையில் இருந்து வரும் அவர் இன்னும் இரு வாரங்களில் பூரண குணமடைந்து வீடு திரும்பி விடவார் என கூறப்பட்டுள்ளது.

காலில் பெரிய கட்டு உடன் மருத்துவமனையில் கருணாகரன் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.