Maanaadu Shooting Schedule Update
மாநாடு படத்தின் அடுத்த ஷூட்டிங் எங்கே? எப்போது? என்பது பற்றிய தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளன.

Maanaadu Shooting Schedule Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக உள்ள மாநாடு படத்தில் நடிக்க உள்ளார்.

இன்று நாளை என தள்ளி போய் கொண்டே இருந்த இப்படத்தின் படப்பிடிப்புகள் நேற்று ஒரு வழியாக பூஜையுடன் தொடங்கின.

தற்போது இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் சென்னையில் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இதனையடுத்து வரும் பிப்ரவரி 28 -ம் தேதி படக்குழு ஐதராபாத் செல்ல உள்ளதாம்.

அங்கு ராமோஜி ராவ் பிலிம்ஸ் சிட்டியில் கிட்டத்தட்ட ஒன்றரை மாதத்திற்கு ஷூட்டிங் நடைபெற உள்ளதாம்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.