Maanaadu Release Update

சிம்புவின் மாநாடு திரைப்படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

Maanaadu Release Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிலம்பரசன். இவரது நடிப்பில் ஈஸ்வரன் திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தில் இஸ்லாமிய வேடத்தில் நடிக்கிறார் என்பதும் அனைவரும் அறிந்ததே.

தற்போது மாநாடு திரைப்படம் ரம்ஜான் பண்டிகை அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.