Maanaadu Release Update

கொரானா வைரஸ் காரணமாக மாநாடு ரிலீஸில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Maanaadu Release Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் அடுத்ததாக மாநாடு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். படத்தில் சிம்பு அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் தற்போது படமாக்கப்பட உள்ளன. அதற்காக செட் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது என தயாரிப்பாளர் வீடியோ ஒன்றின் மூலம் தெரியப்படுத்தி இருந்தார்.

ஆனால் தற்போது கொரானா வைரஸ் தொற்று மீண்டும் தீவிரமாக பரவத் தொடங்கியுள்ளது. இதனால் படப்பிடிப்புகளை பாதுகாப்பாக மரத்தின் கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மேலே க்ளைமாக்ஸ் காட்சிகளில் நிறைய பேர் கலந்து கொள்ள வேண்டுமென்பதால் படப்பிடிப்பை தள்ளி வைக்க படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இதனால் ஜூன் மாதத்திற்கு ரிலீசை தள்ளி வைத்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.