Maanaadu Movie Villi Update
Maanaadu Movie Villi Update

சிம்புவுக்கு வில்லியாக மாநாடு படத்தில் பிரபல நடிகை ஒருவர் கமிட்டாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Maanaadu Movie Villi Update : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. சர்ச்சைக்கு பஞ்சமில்லாத இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் மாநாடு என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். எஸ் ஜே சூர்யா, ஆர்கே சுரேஷ், பாரதிராஜா, மனோஜ், எஸ் ஏ சந்திரசேகர் என பல முக்கிய திரையுலக பிரபலங்கள் சிம்புவுடன் இணைந்து நடித்து வருகின்றனர்.

இவர்களை தொடர்ந்து தற்போது இப்படத்தில் அஞ்சனா கீர்த்தி என்பவரும் இணைந்துள்ளார். இவர் நெகட்டிவ் வேடத்தில் பெண் அரசியல்வாதியாக சிம்புவுக்கு வில்லியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

யார் படமும் வேணா.. என் தம்பி விஜய் படத்தை போடுங்க..அதிர விட்ட அஜித் – இயக்குனர் சொன்ன மாஸ் சீக்ரெட்.!

அழகிய பாண்டியபுரம், அந்தாதி, ஜம்புலிங்கம் 3டி, அம்புலி, ஆஹா, படங்களில் நடித்தவர் அஞ்சனா கீர்த்தி. மேலும் வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியான சென்னை 28 படத்தின் இரண்டாம் பாகத்தில் விஜய் வசந்தின் மனைவியாக நடித்து இருப்பார்.

அதுமட்டுமல்லாமல் வெங்கட் பிரபு தயாரிப்பில் உருவான ஆர்கேநகர் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். தற்போது மூன்றாவது முறையாக வெங்கட்பிரபு படத்தில் இணைந்துள்ளார்.

இதுகுறித்து அஞ்சனா கீர்த்தி மாநாடு படத்தில் என்னுடைய நடிப்பை பலரும் பாராட்டுவார்கள் என எதிர்பார்க்கிறேன். தற்போது படத்தின் கதாபாத்திரம் குறித்து பேச முடியாது. தொடர்ந்து நல்ல கேரக்டர்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன் என தெரிவித்துள்ளார்.