maanaadu movie secret latest update
maanaadu movie secret latest update

மாநாடு படத்தில் எஸ்.ஜே சூர்யாவிற்கு பதிலாக நடிக்க இருந்தது யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சிம்பு. இவரது நடிப்பில் வெளியான படம் மாநாடு. இந்தப் படம் வெளியாகி மக்கள் மனதில் நல்ல வரவேற்பு பெற்றது.

வெங்கட் பிரபு இயக்கத்திலும், சுரேஷ் காமாட்சி தயாரிப்பிலும், உருவான இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.

மேலும் எஸ்.ஏ சந்திரசேகர், கருணாகரன்,பிரேம்ஜி அமரன், பாரதிராஜா, கல்யாணி பிரியதர்ஷன் போன்ற பல பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர்.

குறிப்பாக இந்த படத்தில் எஸ் ஜே சூர்யாவின் நடிப்பு மிகவும் அருமையாக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் எஸ்.ஜே சூர்யாவிற்கு பதிலாக முதலில் இந்தப் படத்தில் நடிக்க இருந்தது அரவிந்த்சாமி தான். ஆனால் அவருக்கு கால்ஷீட் பிரச்சினை இருந்ததால் இந்த படத்தின் எஸ்.ஜே சூர்யா நடித்திருப்பார்.

அரவிந்த்சாமி இந்த படத்தில் நடித்திருந்தால் எப்படி இருக்கும் என்று எங்களோடு கமெண்ட்டில் பகிர்ந்து கொள்ளுங்கள்.