Maanadu
இந்தியன் 2 ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த விபத்தை தொடர்ந்து சிம்புவின் மாநாடு படத்தில் அதிரடி மாற்றம் நடந்தேறியுள்ளது.

Maanaadu Movie Producer Work : கடந்த வாரம் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் கிரேன் அறுந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தது மட்டுமில்லாமல் 10 பேர் படுகாயமடைந்தனர்.

சூப்பர் சிங்கரில் நடந்த கொடுமை.. விஜய் டிவி நிகழ்ச்சியிலேயே கண்ணீருடன் போட்டுடைத்த ஷிவாங்கி – அதிர்ச்சியான நடுவர்கள்!

இந்த விபத்தை தொடர்ந்து தற்போது மாநாடு படத்தின் தயாரிப்பாளர் மாநாடு படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோர்களுக்கு சேர்த்து ரூ 30 கோடிக்கு காப்பீடு செய்துள்ளார்.

மேலும் இதற்கென ரூ 7.8 லட்சம் ஜி.எஸ்.டி-யும் அவர் செலுத்தியுள்ளார். தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் இந்த செயல் திரையுலகில் பாராட்டுகளை பெற்று வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.