Maanaadu Motion Poster Release on Pongal

பொங்கலுக்கு சிம்பு ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் காத்துக் கொண்டுள்ளது. ஆம் மாநாடு படக்குழு அதிரடியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

Maanaadu Motion Poster Release on Pongal : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் அடுத்ததாக ஈஸ்வரன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து இவரது நடிப்பில் மாநாடு, 10 தல, உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாக உள்ளன.

ஈஸ்வரன் திரைப்படம் உலகம் முழுவதும் ஜனவரி 14-ஆம் தேதி பொங்கல் விருந்தாக வெளியாக உள்ளது.

இப்படியான நிலையில் மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பொங்கல் பண்டிகை விருந்தாக மாநாடு படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இதனால் இந்த பொங்கல் சிம்பு ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் பொங்கலாக இருக்கும் என்பது தற்போது உறுதியாகியுள்ளது.