Maanaadu Motion Poster Record

மாநாடு படத்தின் மோஷன் போஸ்டர் இணையத்தில் வெளியாகி சாதனைகளை படைத்து வருகிறது.

Maanaadu Motion Poster Record : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வரும் திரைப்படம் ஈஸ்வரன்.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சிம்புவின் நடிப்பில் அடுத்ததாக மாநாடு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்க சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார்.

ஏற்கனவே படத்தின் போஸ்டர்கள் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் பொங்கல் விருந்தாக இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.

மோஷன் போஸ்டர் வெளியான 15 மணி நேரத்தில் 6 லட்சம் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது.