Maanaadu First Look Release Date

சிம்பு நடித்துவரும் மாநாடு படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் எப்போது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Maanaadu First Look Release Date : தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் தற்போது மாநாடு மற்றும் ஈஸ்வரன் என இரண்டு திரைப்படங்கள் உருவாக்கி வருகின்றனர்.

சுசீந்திரன் இயக்கியுள்ள ஈஸ்வரன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீஸர் ஆகியவை வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன. படத்தின் மொத்த பணிகளும் முடிவடைந்து விட்ட நிலையில் இந்த படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

அதுமட்டுமல்லாமல் வெங்கட்பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் மாநாடு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் சிம்பு. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெகு விரைவில் வெளியாகும் என வெங்கட்பிரபு அறிவித்திருந்தார்.

இப்படியான நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இந்த வார இறுதியில் வெளியாகும் என தகவல்கள் கிடைத்துள்ளன.

சிம்பு படங்களின் அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாகி வருவதால் ரசிகர்கள் உச்ச கட்ட கொண்டாட்டத்தில் இறங்கியுள்ளனர்.

மாநாடு பர்ஸ்ட் லுக் ரிலீஸ் குறித்த அறிவிப்பு நாளை காலை 9.09 மணிக்கு வெளியாகும் என வெங்கட் பிரபுவும் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.