Maanaadu Fan-made Motion Poster Video

சிம்பு ரசிகர்கள் உருவாகியுள்ள மாநாடு படத்தின் மோஷன் போஸ்டரை இணையத்தின் செம்ம ஹிட் அடித்து வருகிறது.

Maanaadu Fan-made Motion Poster Video : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் மாநாடு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

மாநாடு திரைப்படம் சிம்பு ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் சிம்பு அரசியல்வாதியாக காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

மாநாடு படம் குறித்து வெளியான ருசிகர தகவல்

இந்த படத்தின் படப்பிடிப்புகள் எப்போது தொடங்கும் படம் பற்றிய அப்டேட் எப்போது வெளியாகும் என அவருடைய ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Maanaadu Motion Poster Update

இந்த நிலையில் அவர்களின் எதிர்பார்ப்புகளை வெளிப்படுத்தும் விதமாக சிம்பு ரசிகர்கள் ஒன்றிணைந்து மாநாடு திரைப்படத்திற்காக மோஷன் போஸ்டர் ஒன்றை உருவாக்கி உள்ளனர்.

இந்த வீடியோ ட்விட்டரில் சிம்பு 360 பக்கத்தில் வெளியாகியுள்ளது. இந்த மோஷன் போஸ்டர் வீடியோ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதுகுறித்து ரசிகர்களின் சில கமெண்ட்ஸ்

https://twitter.com/itsme_dpu/status/1309350718789177344?s=19
Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.