மாமன்னன் திரைப்படத்தின் செகண்ட் சிங்கிள் பாடல் வெளியானது.

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி இயக்குனராக வலம் வரும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் “மாமன்னன்”. வடிவேலு, கீர்த்தி சுரேஷ், ஃபஹத் பாசில் உள்ளிட்டோர் இணைந்து நடித்திருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது தொடர்ந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வந்திருந்ததை தொடர்ந்து இப்படத்தின் செகண்ட் சிங்கிள் பாடல் இன்று வெளியாக இருப்பதை படக்குழு சமீபத்தில் அறிவித்திருந்தது.

இந்த நிலையில் இப்படத்தின் ஏ ஆர் ரகுமான் குரலில் உருவாகி இருக்கும் செகண்ட் சிங்கிள் பாடலான ‘ஜிகுஜிகு ரயிலு’ என்னும் பாடல் வெளியாகி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கவர்ந்து இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த பாடல்.