மாமன்னன் திரைப்படம் ஜூன் மாதத்தில் ரிலீஸ் ஆக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

கோலிவுட் திரை உலகில் தவிர்க்க முடியாத பிரபலம் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் மாரி செல்வராஜ். இவரது இயக்கத்தில் கர்ணன் திரைப்படத்தின் வரவேற்பை தொடர்ந்து உருவாகி இருக்கும் திரைப்படம் மாமன்னன். உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்திருக்கிறார். மேலும் இதில் நடிகர் வடிவேலு, பகத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில் ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது இப்படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இப்படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது.

அதன்படி, ‘மாமன்னன்’ திரைப்படத்தை பக்ரீத் பண்டிகையையொட்டி வரும் ஜூன் 29-ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக புதிய தகவல் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வைரலாகி வருகிறது.