மாமன்னன் திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கள் பாடல் வெளியானது.

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி இயக்குனராக வலம் வரும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் “மாமன்னன்”. ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தில் வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பகத் பாசில் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று. விரைவில் திரைக்கு வர இருக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சமீபத்தில் படக்குழு வெளியிட்டு இருந்ததை தொடர்ந்து தற்போது ஏ ஆர் ரகுமான் இசையில் உருவாகி இருக்கும் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் இன்று மாலை வெளியாகும் என்ற அறிவிப்பை படக்குழு சமீபத்தில் வெளியிட்டு இருந்தது.

அதன்படி ஏ ஆர் ரகுமான் இசையில் வடிவேலு குரலில் உருவாகி இருக்கும் “ராசா கண்ணு” என்னும் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. அது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.