மாமன்னன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி இயக்குனராக வலம் வரும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் “மாமன்னன்”. ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தில் வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பகத் பாசில் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று. விரைவில் திரைக்கு வர இருக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சமீபத்தில் படக்குழு வெளியிட்டு இருந்ததை தொடர்ந்து ஏ ஆர் ரகுமான் இசையில் வடிவேலு குரலில் உருவாகி இருக்கும் “ராசா கண்ணு” என்னும் பாடல் வெளியாகி ரசிகர்களால் ட்ரெண்டிங்கானது.

இதன் வரவேற்பை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாடல் மே 27 ஆம் தேதியான நாளை வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்திருக்கும் நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து அப்டேட் வைரலாகி வருகிறது. அதன்படி, இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் வருகிற ஜூன் மாதம் முதல் வாரத்தில் நடைபெற உள்ளதாகவும் இதில் நடிகர் கமல்ஹாசன் கலந்துகொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.