சிம்பிளாக நடந்து முடிந்துள்ளது எம்.எஸ் பாஸ்கர் மகளின் வளைகாப்பு நிகழ்ச்சி
தமிழ் சினிமாவில் 75 படத்திற்கும் மேல் நடித்து பிரபலமானவர் எம்.எஸ் பாஸ்கர். கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான ரகு தாத்தா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் எம்.எஸ் பாஸ்கர் நடித்திருந்தார்.
இவரது மகள் ஐஸ்வர்யா பாஸ்கருக்கு 2021 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் அவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் சிம்பிளாக முடித்துள்ளனர்.
இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளதால் ரசிகர்கள் பலரும் ஐஸ்வர்யாவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஐஸ்வர்யா பாஸ்கர் பல நடிகைகளுக்கு டப்பிங் கொடுத்துள்ளார் என்பதை குறிப்பிடத்தக்கது.