நடிகர் ரஜினிகாந்த்திற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த மு க ஸ்டாலினின் ட்விட்டர் பதிவு வைரல்.

கோலிவுட் திரை உலகில் ரசிகர்களால் என்றென்றும் சூப்பர் ஸ்டார் என்று அன்போடு அழைக்கப்பட்டு வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் அண்ணாத்த திரைப்படத்தை தொடர்ந்து தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தை தொடர்ந்து லால் சலாம் என்னும் அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்க இருக்கும் திரைப்படத்தில் நடிக்க இருக்கும் இவர் டிசம்பர் 12ஆம் தேதியான இன்று தனது 72 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இந்நிலையில் இவரது பிறந்தநாளுக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

அதில் அவர், என் இனிய நண்பர் தமிழ்த் திரையுலக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள், நல்ல உடல்நலத்துடன் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன். என்று அன்போடு தனது வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார். அது தற்போது வைரலாகி வருகிறது.