M.G.R’s Next Generation Me Only – Rajinikanth vs Kamal Haasan.!

YouTube video

Vignesh Shivan About Paava Kathaigal : Netflix நிறுவனத்தின் சமீபத்திய தமிழ் ஆந்தாலஜி திரைப்படமான “பாவக்கதைகள்” படத்தினை தமிழின் முக்கிய இயக்குனர்களான சுதா கொங்குரா, விக்னேஷ் சிவன், கௌதம் மேனன், வெற்றிமாறன் ஆகியோர் இயக்கியுள்ளனர். காதல், அந்தஸ்து, கௌரவம் ஆகியவை நம் உறவுகளில் ஏற்படுத்தும் மாற்றங்களை நான்கு அழகான கதைகளின் வழியே சொல்கிறது இப்படம்.

இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள “லவ் பண்ணா உட்றனும்” பகுதி பலமிக்க பிரபல அரசியல்வாதி ஒருவரின் பெண், தனது சாதியை கடந்து ஒருவரை காதலிக்கும் போது, என்ன நடக்கும் என்பதை சொல்கிறது. இப்பகுதியில் பதம்குமார் அரசியல்வாதி வீரசிம்மன் பாத்திரத்தில் நடித்துள்ளார்.

அவரது இரட்டை பிறவி மகள்களான ஆதிலக்‌ஷ்மி மற்றும் ஜோதிலக்‌ஷ்மியாக நடிகை அஞ்சலியும், கல்கி கொச்சலினும் நடித்துள்ளார்கள். இவர்களில் ஒரு மகள் தனது தந்தையும் சமூகமும் ஒப்புக்கொள்ளாத ஒருவனோடு காதல் கொள்கிறாள். மேலும் தனது தந்தையின் சம்மதம் பெறவும் முயல்கிறாள். அவளது காதல் அனைத்தையும் கடந்து வெல்லுமா, அல்லது மனித உணர்வுகளை விட ஒருவரின் கௌரவமும், சாதியும் தான் முக்கியமா என்பதே கதை.