Lyricst Vivek

Lyricst Vivek : தளபதி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டு ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார் பாடலாசிரியர் விவேக்.

தளபதி விஜயின் மெர்சல் படத்தில் இருந்து தற்போது வரை தொடர்ந்து மூன்று படங்களுக்கு பாடல் எழுதி வருபவர் பாடலாசிரியர் விவேக்.

மெர்சலில் இடம் பெற்றிருந்த ஆளப்போறான் தமிழன் என்ற பாடல் வரிகளின் மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களை கவர்ந்து விட்டார். தளபதி 63 படத்திலும் இவர் பாடல் எழுத உள்ளார்.

இந்நிலையில் தற்போது தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். அதற்கு காரணம் ரசிகர்களிடம் நீண்ட நாட்களாக பேசாமல் இருந்தது தான் எனவும் கூறியுள்ளார்.

வேலை பளுவால் உங்களிடம் பேசாமல் விட்டுட்டேன்.. சாரி விரைவில் உங்களிடம் பேசுவேன் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் விரைவில் உங்களுக்காக தளபதி 63 அப்டேட் கொடுப்பேன். அப்படி கொடுக்கவில்லை என்றாலும் என்னை உங்க வீட்டு பிள்ளையா நினைத்து மன்னித்து விட வேண்டும் எனவும் காமெடியாக கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.