ஏழு நாளில் வாரிசு படத்தின் வசூல் என்ன என்பது குறித்து பாடல் ஆசிரியர் விவேக் பதிவு செய்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் தான் வாரிசு.

இது துணிவோட ஒப்பீடு இல்லை.. ஏழு நாளில் வாரிசு வசூல் இதுதான் - பாடல் ஆசிரியர் விவேக் போட்ட பதிவு.!!

உலகம் முழுவதும் கடந்த ஜனவரி 11ஆம் தேதி வெளியான இந்த திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்க சரத்குமார், பிரபு, பிரகாஷ்ராஜ், யோகி பாபு, நடிகர் ஷாம், ஸ்ரீகாந்த், ஜெயசுதா என பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

தற்போது இந்த படம் ஏழு நாளில் 210 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. இது போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள கவிஞர் விவேக் இது துணி ஓட ஒப்பிட்டு சொல்ல விரும்பல, துணிவு திரைப்படமும் நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இது துணிவோட ஒப்பீடு இல்லை.. ஏழு நாளில் வாரிசு வசூல் இதுதான் - பாடல் ஆசிரியர் விவேக் போட்ட பதிவு.!!

அதே சமயம் வாரிசு திரைப்படம் ஏழு நாளில் 210 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. செம.. போட்றா பிஜிஎம் என பதிவு செய்துள்ளார். இவருடைய இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.