Lyca Willing to Resume Indian 2 : Kamal Haasan | Shankar | Anirudh | Kajal Aggarwal | Kollywood | Tamil Cinema | Latest Cinema News

Lyca Willing to Resume Indian 2 :

தங்களுடைய பணம் பல கோடிகளில் இந்த படத்தில் ஏற்கனவே செலவழித்து விட்டதால் தற்போது எப்படியாவது படத்தை எடுத்து வெளியிட லைக்கா தீவிரமாக முயற்சி செய்து வருகிறதாம்.

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 2.0 படத்தை அடுத்து கமல்ஹாசனை வைத்து இந்தியன் 2 படத்தை இயக்க தொடங்கினார்.

ஆனால் கமல்ஹாசனின் அரசியல் பிரவேசம், செட்டாகாத மேக்கப் என இப்படத்தின் படப்பிடிப்புகள் தொடர்ந்து தள்ளி போய் கொண்டே இருக்கிறது. இதனால் கமலுக்கும் ஷங்கருக்கும் சண்டை என்றும் ஒரு தகவல் பரவி வருகிறது.

மேலும் இந்தியன் 2 படம் டிராப் என்றும் இப்படத்தை இந்தியில் எடுக்க ஷங்கர் திட்டமிட்டிருப்பதாகவும் சொல்லப்பட்டது.

சர்ச்சை நாயகியுடன் இணையும் சிவகார்த்திகேயன் – உறுதியானத் தகவல்!

ஆனால் இப்படம் drop ஆகவில்லையாம் கூடிய விரைவில் இதன் படப்பிடிப்பு சென்னையில் துவங்க உள்ளதாம்.

இப்படத்திற்காக பிரம்மாண்டமான அரங்கங்கள் தயாரித்துவிட்டு அதற்கு தற்போது வரை வாடகை காட்டி வருகிறார்களாம்.

இதுபோக அட்வான்ஸ் சம்பளமாகவே கமல், ஷங்கர் மற்றம் ஒளிப்பதிவாளருக்கு கிட்டத்தட்ட 70 கோடி வரை லைக்கா கொடுத்துள்ளார்களாம்.

இப்படி தங்களுடைய பணம் பல கோடிகளில் இந்த படத்தில் ஏற்கனவே செலவழித்து விட்டதால் தற்போது எப்படியாவது படத்தை எடுத்து வெளியிட லைக்கா தீவிரமாக முயற்சி செய்து வருகிறதாம்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.