Indian 2 Accident
இந்தியன் 2 விபத்துக்கு நீங்களும் தான் பொறுப்பு என லைகா நிறுவனம் கமலின் அறிக்கைக்கு பதிலடி அறிக்கை அளித்துள்ளது.

Lyca Reply About Indian2 Accident : தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் இந்தியன் 2.

இந்த படத்தின் படபிடிப்பு தளத்தில் நடந்த விபத்தில் மூவர் உயிரிழந்திருந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது.

தலயா? தளபதியா? என்ற கேள்வி வாணி போஜன் அளித்த பதில்.. அம்மணிக்கு அவ்வளவு பயம் – என்ன சொல்லி இருக்காரு பாருங்க.!

இந்த சோகத்திற்கு பிறகு கமல் லைகாவிற்கு எழுதி இருந்த கடிதத்தில் இனி நீங்கள் தயாரிக்கும் படங்களுக்கு சரியான பாதுகாப்பை அளியுங்கள் என கூறி இருந்தார்.

இதற்கு பதில் அளித்து லைகா வெளியிட்டுள்ள அறிக்கையில் உங்கள் அறிக்கை கிடைப்பதற்கு முன்பாகவே நாங்கள் இறந்தவர்களின் இறுதி சடங்கிற்கும் அவர்களின் குடும்பத்திற்கும் உதவி செய்து விட்டோம் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் மிக பெரிய நடிகர் உலக நாயகன் கமல்ஹாசன், பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் ஆகியோரின் படம் நிச்சயம் சரியாக தான் நடக்கும் என நம்பினோம். இந்த விபத்துக்கு அனைவருக்கும் தான் பொறுப்பேற்க வேண்டும் என கூறியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.