
Lyca Production Relief : டெல்டா மக்களுக்காக லைகா நிறுவனம் அளித்துள்ள நிவாரண தொகை திரையுலக ரசிகர்களை மிரள வைத்துள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட மக்களுக்காக ரூ 1 கோடியே 1 லட்சம் ரூபாய் நிதியாக அளித்துள்ளது.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட மக்களுக்காக திரையுலக பிரபலங்கள் பலரும் உதவி செய்து வருகின்றனர்.
ரஜினி ரசிகர் மன்றம் மூலமாக ரூ 50 லட்சம் கொடுக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். அதே போல நடிகர் சூர்யா ரூ 50 லட்சமும் விஜய் சேதுபதி ரூ 25 லட்சமும் அளித்திருந்தார்.
அதுமட்டுமில்லாமல் சிவகார்திகேயன் ரூ 10 லட்சம் நிதி அளித்து இருந்தார். தளபதி விஜய் இதுவரை சுமார் ரூ 40 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.
இவர்களை தொடர்ந்து தற்போது பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் அதிரடியான இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
#SaveDelta pic.twitter.com/tnKAYfZcVZ
— Lyca Productions (@LycaProductions) November 20, 2018