Lyca Kovai Kings Won The Match : Sports News, World Cup 2019, Latest Sports News, India, Sports, Latest Sports News, TNPL 2019, TNPL Match 2019

Lyca Kovai Kings Won The Match :

தமிழ்நாடு பிரிமீயர் லீக்கின் 4-வது போட்டி திண்டுக்கல்லில் நடைபெற்றது. இதில் லைகா கோவை கிங்ஸ் – விபி காஞ்சி வீரன்ஸ் அணிகள் மோதின. லைகா கோவை கிங்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி காஞ்சி அணியின் விஷால், முகிலேஷ் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். விஷால் 1 ரன்னிலும், முகிலேஷ் ரன்ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தார். 1 ரன்கள் எடுப்பதற்குள் இரண்டு விக்கெட்டுக்களை இழந்ததால் அந்த அணி தத்தளித்தது.

அதன்பின் 3-வது விக்கெட்டுக்கு சுரேஷ் லோகேஷ்வர் – பாபா அபரஜித் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர்.

பொன்னியின் செல்வன் பட்ஜெட் இத்தனை கோடியா? இதனால் லைகா பின்வாங்கியதா? – ஷாக்கிங் அப்டேட்.!

இந்த ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. சுரேஷ் லோகேஷ்வர் 31 ரன்னும், பாபா அபரஜித் 28 ரன்களும் சேர்த்தனர். சஞ்சய் யாதவ் 23 பந்தில் 31 ரன்கள் சேர்த்தார்.

பின்னர் 151 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் லைகா கோவை கிங்ஸ் பேட்டிங்கை தொடங்கியது. தொடக்க வீரர்களாக ஷாருக்கானும் , அபினவ் முகுந்தும் களம் இறங்கி ஆடினர். இருவரும் அதிரடியாக ஆடி ரன் சேர்த்தனர்.

ஷாருக்கான் 40 ரன் அடித்திருந்த நிலையில் விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து வந்த ரஞ்சன் பால் 1 ரன்னில் வெளியேறினார்.

அதைத் தொடர்ந்த வந்த அனிருத் சீதா ராம், அபினவ் முகுந்துடன் ஜோடி சேர்ந்து ஆடினார். அபினவ் நேர்த்தியாக ஆடி அரை சதம் அடித்தார்.

இறுதியில் கோவை கிங்ஸ் அணி 15.2 ஓவர்களில் 2 விக்கெட்டை இழந்து 151 ரன் எடுத்து வெற்றி பெற்றது. அபினவ் முகுந்த் 70 ரன்னுடனும், அனிருத் சீதா ராம் 22 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.