Lucifer Tamil
Lucifer Tamil

Lucifer Tamil – மலையாள சினிமாவை பொறுத்தவரை அவர்களுடைய படங்கள் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பைப் பெறும் ஆனால் வசூல் அளவில் மற்ற மொழிகளை விட அவர்கள் எப்போதும் பின்தங்கியே இருப்பார்கள்.

ஆனால் சமீப காலமாக மோகன்லால் இந்த வரலாற்றை மாற்றியமைத்து வருகிறார். குறிப்பாக இவருடைய புலி முருகன் படம் நூறு கோடி வசூல் மிகப்பெரிய வசூல் சாதனை நிகழ்த்தியது.

கவர்ச்சி நடிகை சோனாவின் புது அவதாரம்.!

அதைதொடர்ந்து அண்மையில் வெளியாகியுள்ள அவருடைய லூசிபர் திரைப்படம் வெளியான மூன்றே வாரத்தில் 150 கோடி வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இப்படி தன் படங்களின் சாதனையை தானே முறியடிக்கும் அளவு மோகன்லால் மலையாள சினிமாவின் தன்னிகரில்லா நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார்.

தனுஷ் பிறந்தநாளுக்கு இப்பவே இணையத்தை தெறிக்கவிடும் ரசிகர்கள்; என்னன்னு நீங்களே பாருங்க!

இந்நிலையில் இப்படம் தற்போது தமிழில் டப் செய்யப்பட்டுள்ளதாம். இதன் ரிலீஸ் மே மூன்றாம் தேதி இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.