low-blood-pressure
low-blood-pressure

Low Blood pressure Treatment :

உயர் ரத்த அழுத்தத்தை பற்றி பலரும் அறிந்திருக்கலாம். இதே நேரத்தில் குறைந்த ரத்த அழுத்தம் பற்றி யாருமே கண்டுகொள்வதில்லை, ஏதோ ஒரு சத்து குறைபாடு என்று நினைத்து விட்டு விடுகிறோம். ஆனால் குறை ரத்த அழுத்தமானது சைலன்ட் கில்லர் போல் செயல்படுகிறது.

● ரத்த அழுத்தம்:

* ரத்தம் இதயத்துக்கு வரும்போது ஒரு குறிப்பிட்ட வேகத்திலும் இதயத்திலிருந்து வெளியேறும் போது ஒரு குறிப்பிட்ட வேகத்திலும் செல்கிறது இதனைத்தான் நாம் ரத்த அழுத்தம் என்கிறோம்.

*இயல்பான ரத்த அழுத்த அளவு —120/80 மில்லி மீட்டர்.

* உயர் ரத்த அழுத்தம் –140/90 மில்லி மீட்டருக்கு மேல் அதிகரித்தல்.

* குறை ரத்த அழுத்தம் –90/60 மில்லி மீட்டருக்கு கீழ் குறைதல்.

● அறிகுறிகள்:

தலைச்சுற்றல், மயக்கம், வாந்தி, வழக்கத்துக்கு மாறான அதீத நாவறட்சி, சோர்வு, பலவீனம், கண்கள் இருட்டாவது போன்ற உணர்வு, பார்வை குறைவது, மனக்குழப்பம், வேலையில் கவனம் செலுத்த முடியாத நிலைமை,உடல் சில்லிட்டுப்போவது, மூச்சுவாங்குவது போன்ற அறிகுறிகளில் ஏதேனும் ஒன்றோ அல்லது பல அறிகுறிகளோ உங்களால் உணர முடியும்.

● குறைந்த ரத்த அழுத்தம் சீராக வழிமுறைகள்:

*தினமும் உணவில் வாழைப்பழம், முலாம்பழம், அத்திப்பழம், மாம்பழம், தக்காளி சாறு, முட்டைக்கோஸ், உலர்திராட்சை, பீட்ரூட், காரட், தயிர், உப்புத்தண்ணீர், காபி போன்றவைகளை தினமும் சேர்த்துக் கொள்ளலாம்.

* மருத்துவரின் ஆலோசனை படி நாம் உண்ணும் உணவில் உப்பின் அளவை அதிகரிக்கலாம்.

* பீட்ரூட் சாறினை தினமும் குடித்துவர ரத்தம் விருத்தி அடைந்து குறைந்த ரத்த அழுத்தம் சீராகும்.

* ரத்த அழுத்தம் சீராக மோரில் எலுமிச்சை பழச்சாறு கலந்து சாப்பிட்டு வரலாம்.

*குறைந்த ரத்த அழுத்தம் இருப்பவர்கள் ஜடமான்சி வேர், கற்பூரம் மற்றும் இலவங்கப்பட்டை நன்றாக இடித்து போட்டு நீர் விட்டு காய்ச்சி வடிகட்டி குடித்து வந்தால் குறைந்த இரத்த அழுத்தம் மாறும்.

* தினசரி குறைந்தது 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிப்பதால் உடலில் ரத்த அழுத்தம் சீராகும்.

*30 முதல் 40 காய்ந்த திராட்சையை இரவில் ஊற வைத்து வெறும் வயிற்றில் காலையில் அப்படியே சாப்பிட குறைந்த ரத்த அழுத்தம் சீராகும். இதனை தொடர்ந்து ஒரு சில மாதங்கள், அல்லது ஒரு சில வாரங்களாகவது, கடைப்பிடிக்க வேண்டும்.

* இரவில் 5 முதல் 6 பாதாமை நீரில் ஊற வைத்து காலையில் தோல் நீக்கி பதமாக அரைத்து பாலில் கலந்து கொதிக்க வைத்து குடிக்க குறைந்த ரத்த அழுத்தம் சீராகும்.

*தினமும் கேரட் சாறுடன் தேன் கலந்து குடித்து வர ரத்த அழுத்தம் சீராகும்.

* எலுமிச்சைச் சாறுடன் உப்பு அல்லது நீர் கலந்து குடிக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here