வாரிசு திரைப்படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு தமிழில் வெற்றி நடை போடும் லவ் டுடே திரைப்படத்தை தெலுங்கில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் ஜெயம் ரவியை வைத்து கோமாளி படத்தை இயக்கி மிகப்பெரிய ஹிட் கொடுத்த பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்துள்ள “லவ் டுடே” திரைப்படம் கடந்த நவம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தில் ராதிகா சரத்குமார், சத்யராஜ், யோகி பாபு, ரவீனா ரவி, இவானா, விஜய் வரதராஜ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படம் வெளியான 4 நாட்களில் 17 கோடிக்கு மேல் வசூல் செய்து மாபெரும் வெற்றியை கொண்டாடி வரும் நிலையில் இப்படத்தை தெலுங்கில் வெளியிட வாரிசு திரைப்படத்தின் தயாரிப்பாளரான இதில் ராஜு அவர்கள் திட்டமிட்டு இருப்பதாக தகவல் அண்மையில் வெளியாகி இருந்தது . இது குறித்த அதிகாரவபூர்வமான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இதனால் இப்படத்தைக் காண தெலுங்கு ரசிகர்களும் அதிக எதிர்பார்ப்போடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.