Love Matter : S.A Chandra Sekar's 70th Movie Title.! | Thalapathy Vijay | S A ChandraSekar | Actor Jai | Latest Tamil Cinema News | Kollywood Cinema News
S.A சந்திரசேகர் இயக்கும் 70-வது படத்தின் பெயர் லவ் மேட்டர் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஹீரோ, ஹீரோயின் யார் என்பது குறித்த விவரங்களும் வெளியாகியுள்ளன.

Love Matter : சென்னை-28, எங்கேயும் எப்போதும், ராஜா ராணி, நீயா-2, இப்படி பல வெற்றி படங்களில் நடித்தவர் ஜெய்.  தற்போது இவர் லவ் மேட்டர் என்ற புதிய படத்தில்  நடிக்கிறார்.

இந்தப் படத்தில் வைபவி (இருட்டு அறையில் முரட்டு குத்து கதாநாயகி) அதுல்யா என இரண்டு கதாநாயகிகள் நடிக்கின்றனர்.  இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து சென்னையில் நடந்து வருகிறது.

தனது 25-வது  படம் பற்றி ஜெய் கூறியதாவது, துரு, துரு, ஜாலி சுவாரஸ்யம் கலந்து லவ்மேட்டர் திரைப்படம் எனது 25 வது  படமாக அமைந்ததில் மட்டற்ற மகிழ்ச்சி.

பல வெற்றிப் படங்களை தந்தது மட்டுமல்லாமல், விஜய்யை வைத்து பல இளமை ததும்பும் படங்களை இயக்கிய    எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கும் 70-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

நேசமணிக்கு ஆபரேஷன் செய்யும் ஆரவ், பாத்துப்பா முத்தம் கொடுத்துடாத – வைரல் ட்வீட்.!

முழுக்க முழுக்க 20-வயதுக்குட்பட்ட இளம் உதவியாளர்களுடன் எஸ்.ஏ.சி 20 வயது  இளைஞரை போல பணியாற்றியுள்ளார். இளம்  தலைமுறையினருக்கு  பிடித்த அம்சங்களுடன்  இந்தப்படம்  உருவாகிறது. வெளியில் கண்டிப்பான இயக்குனர் என்ற பெயர் எஸ்.ஏ.சி.க்கு உண்டு.  ஆனால்  எல்லோரையும் ப்ரியாக விட்டு ஜாலியாக படமாக்கிய விதம் அருமை.  அதனாலே என்னால் அதிக ஈடுபாட்டோடு வேலை பார்க்க முடிந்தது.

விஜயகாந்த், விஜய்யை வைத்து அவர் இயக்கி வெற்றி பெற்ற பல படங்களில் கதாநாயகர்களின் பெயர் விஜய்.  எனவே  லவ் மேட்டர் படத்தில் கார்த்தி என்ற எனது கதாபாத்திரத்தை விஜய் என்று வைக்குமாறு கேட்டுக் கொண்டேன்.

முழு ஈடுபாட்டுடன் எல்லோரும் ஒரு ஜாலி மூடோடு நடித்து வருகிறோம். இசை:சித்தார்த், ஒளிப்பதிவு :ஜீவன்,  தயாரிப்பு & இயக்கம் :எஸ்.ஏ .சந்திரசேகரன் .

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.