Losliya With Lite Makeup

காதோரம் செம்பருத்திப்பூ வைத்து ஓவர் மேக்கப் இல்லாமல் லாஸ்லியா வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Losliya With Lite Makeup : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் போட்டியாளராக பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் லாஸ்லியா.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நான்கைந்து படங்களில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் இவர் தொடர்ச்சியாக சமூக வலைதளப் பக்கங்களில் விதவிதமாக போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காதோரம் செம்பருத்தி பூ ஒன்றை வைத்து ஓவர் மேக்கப் இல்லாமல் சிம்பிளாக இவர் நடத்திய போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.