losliya
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களிடம் புகழடைந்த லாஸ்லியா அவருக்கு ஆதரவு தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Losliya say thanks and sorry to her supporters – இலங்கையை சேர்ந்த தமிழ் பெண்ணான லாஸ்லியா நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இவருக்குதான் முதலில் ஆர்மியும் உருவானது. பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர்களிலேயே ஓவியாவிற்கு பின் இவருக்குதான் ரசிகர்கள் அதிகமாக இருந்தனர். ஆனாலும், கவின் மீது கொண்ட காதல் காரணமாக அவர் கெட்ட பெயரை சம்பாதித்தார். எனினும் பிக்பாஸ் இறுதி நிலை வரை சென்றார்.

இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்துள்ள நிலையில், நீண்ட நாட்களுக்கு பின் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை போட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:

முதலில் என் மீது காட்டிய அன்பு மற்றும் ஆதரவிற்காக உங்கள் அனைவரிடமும் நன்றி தெரிவிக்கிறேன். நன்றி என்பது சிறிய வார்த்தையாக கருதுகிறேன். உங்களை மிகவும் நேசிக்கிறேன். எனக்கு அளித்த ஆதரவு ஆச்சர்யமாக இருக்கிறது. அதற்காக நன்றி. நீங்கள் அனைவரும் பெருமை கொள்ளும்படி நான் நடந்து கொள்வேன்’ என அவர் அந்த பதிவில் கூறியுள்ளார்.