Losliya First Movie Salary

பிக் பாஸ் லாஸ்லியா நடித்து வரும் முதல் படத்திற்கு வாங்கிய சம்பளம் எவ்வளவு என்ற தகவல் ஒன்று வைரலாகி வருகிறது.

Losliya Salary for First Movie : உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் மூலமாக பிரபலமானவர் லாஸ்லியா.

இந்த நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த புகழுக்கு பிறகு பிரண்ட்ஷிப் என்ற படத்தில் ஹர்பஜன் சிங்கிற்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இந்த படத்தில் நடிகர் அர்ஜுனும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தன.

தமிழ் திரையுலக வரலாற்றில் அதிக நாட்கள் ஓடிய திரைப்படங்கள், அஜித் விஜய் படங்களுக்கு என்ன இடம்? – லிஸ்ட் உடன் இதோ.!!

தற்போது இப்படத்திற்காக லாஸ்லியா ரூபாய் 25 லட்சம் சம்பளமாக வாங்கியதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

ஒரு அறிமுக நடிகைக்கு இவ்வளவு பெரிய தொகை சம்பளமாக கொடுக்கப்படுவதில்லை. ஆனால் லாஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக பிரபலமானதால் இந்த சம்பளம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் இது அதிகாரப்பூர்வமான தகவல் அல்ல, சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வரும் தகவல் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.