Losliya Pair With BB Tharshan

கேஎஸ் ரவிக்குமார் தயாரிப்பில் தர்ஷனுக்கு ஜோடியாகும் பிக்பாஸ் பிரபலம். வெளியான தகவல்.

Losliya Pair With BB Tharshan : தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வருபவர் கே.எஸ் ரவிக்குமார். இவர் குடும்பப்பாங்கான படங்களையே அதிகம் இயக்கியுள்ளார்.

புரியாத புதிர், ஊர் மரியாதை, நாட்டாமை, பெரிய குடும்பம், முத்து நட்புக்காக, சமுத்திரம், என எண்ணற்ற குடும்ப திரைப்படங்களை இயக்கி திரை உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் கே.எஸ் ரவிக்குமார்.

மேலும் இவர் பிக்பாஸ் பிரபலமான தர்ஷனை ஹீரோவாக வைத்து மலையாள படமான “ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்” படத்தை ரீமேக்கில் தயாரிக்க உள்ளார்.

அதில் கேஎஸ் ரவிக்குமாருக்கு மகனாக தர்ஷன் நடிக்கப் போவதாகவும் வெளிவந்த தகவல் அனைவரும் அறிந்ததே..

ஆனால் தற்போது தர்ஷனுக்கு ஹீரோயினி ஆக பிக்பாஸ் பிரபலம் லாஸ்லியா நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது.

இந்தத் தகவல் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தையும், எதிர்பார்ப்பையும், ஏற்படுத்தி வருகிறது.