Losliya Next Movie Announcement
Losliya Next Movie Announcement

நடிகை லாஸ்லியாவின் அடுத்த படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Losliya Next Movie Announcement : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர் லாஸ்லியா.

இலங்கையைச் சேர்ந்த ஈழத்துத் தமிழச்சியான இவர் தமிழ் சினிமாவில் பிரெண்ட்ஷிப் என்ற படத்தின் மூலமாக நாயகியாக அறிமுகமாக உள்ளார். இந்த படத்தில் நாயகனாக கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடித்து வருகிறார். நடிகர் அர்ஜுன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து நடிகை லாஸ்லியா இளம் நடிகரான ஆரிக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கிறார்.

பிக்பாஸில் கிடைத்த புகழ்.. முதல் படத்திற்கு லாஸ்லியா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? தலைசுற்ற வைக்கும் தகவல்(Opens in a new browser tab)

இவ்விரண்டு படங்களைத் தொடர்ந்து மூன்றாவது படத்திலும் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

ஆக்சிஸ் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிக்க உள்ள பத்தாவது படத்தில் லாஸ்லியா நாயகியாக நடிக்க உள்ளார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பூரனேஷ் என்ற அறிமுக நடிகர் நடிக்க உள்ளார்.

இந்த படத்தை ஜெயம் ராஜ சரவணன் என்பவர் எழுதி இயக்க டெல்லி பாபு தயாரிக்க உள்ளார்.

https://twitter.com/LosliyaSis/status/1300050127323721728?s=19
https://twitter.com/Losliyahearts/status/1299929382484500480?s=19