பிக் பாஸ் லாஸ்லியாவுக்கு திருமணம் எனவும் மாப்பிள்ளை யார் என்பது குறித்த தகவல் ஒன்றும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Losliya Marriage Details : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் லாஸ்லியா.

இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து இவர் தமிழ் சினிமாவில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கிற்கு ஜோடியாக பிரெண்ட்ஷிப் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் நடிகர் ஆரிக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் அறிமுக நடிகர் நடிக்கும் ஒரு படத்திலும் நாயகியாக நடிக்க உள்ளார்.

பிக் பாஸ் வீட்டில் இருக்கும்போது கவினை காதலித்த லாஸ்லியாவெளியே வந்த பிறகு அந்த காதல் குறித்து எதையும் பேசாமல் இருந்து வருகிறார். உண்மையில் இருவருக்கும் இடையே காதல் இருக்கிறதா இல்லையா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்த நிலையில் தற்போது லாஸ்லியாவுக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாகவும் அவருக்கு அவருடைய பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் மாப்பிள்ளை லாஸ்லியாவின் அப்பாவின் நண்பருடைய மகன் என கூறப்படுகிறது. இவர் கனடாவில் வசித்து வருவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

லாஸ்லியாவுக்கு வேறொரு மாப்பிள்ளையுடன் திருமணம் என இணையத்தில் வெளியாகியுள்ள இந்த தகவல் கவிலியா ஆர்மியை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

உண்மை என்ன என்பதை லாஸ்லியா தான் உறுதிப்படுத்த வேண்டும். என்ன சொல்கிறார் என பொறுத்திருந்து பார்க்கலாம்.