Losliya Like a Queen in Hell
Losliya Like a Queen in Hell

நரகத்திற்கு போனால் கூட இப்படித்தான் இருக்க வேண்டுமென புகைப்படத்தை வெளியிட்டு தன்னுடைய ஆசையை கூறியுள்ளார் லாஸ்லியா.

Losliya Like a Queen in Hell : உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் லாஸ்லியா.

இலங்கையைச் சேர்ந்த ஈழத்து தமிழச்சியான இவர் சினிமாவில் நாயகியாக வேண்டும் என்ற ஆசையுடனேயே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அவரின் ஆசைப்படியே தற்போது கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கிற்கு ஜோடியாக பிரெண்ட்ஷிப் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

சூப்பர் ஸ்டார் ஸ்டைலில் மாஸ் காட்டிய சமீரா ரெட்டியின் சுட்டி குழந்தை – வைரலாகும் வீடியோ

அதுமட்டுமல்லாமல் நடிகர் ஆரிக்கு ஜோடியாக பெயரிடாத படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் இன்னும் இரண்டு நாயகிகள் நடிக்கின்றனர் அதில் ஒருவராக பிக் பாஸ் அபிராமியும் நடிக்கிறார்.

மேலும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் லாஸ்லியா அடிக்கடி தன்னுடைய அழகிய போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டு நரகத்திற்கு சென்றாலும் அங்கு ராணியாகவே இருக்க ஆசைப்படுவதாக அவர் கூறியுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதேபோல் சில தினங்களுக்கு முன்னர் லாஸ்லியா கண்ணாடி முன்பு நின்று கொண்டு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு செய்த தவறுகளை ஒப்புக் கொள்ள வேண்டுமென ஒரு பதிவை பதிவிட்டிருந்தார்.

https://www.instagram.com/p/CAAgdB6JUur/?igshid=1x6gbbfdlomq1

இதனை பார்த்த ரசிகர்கள் லாஸ்லியா கவினின் காதலைத்தான் மறைமுகமாக விமர்சிக்கிறார் என பேசி வந்தனர்.

ஆனால் நான் கவினைப் பற்றி பேசவில்லை. தற்போதைய சூழ்நிலை குறித்து தான் பேசினேன். தேவை இல்லாமல் நீங்களாகவே எதையாவது கற்பனை செய்து அதை பரப்பி விடாதீர்கள் என பதிலடி கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.