முதன்முறையாக சோப்பு விளம்பரத்தில் நடித்துள்ளார் லாஸ்லியா.
Losliya in Beauty Soap Ad : சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீஸனில் கலந்து கொண்டு பிரபலமானார் லாஸ்லியா.
இந்த நிகழ்ச்சியின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆனார். இலங்கையைச் சார்ந்த ஈழத்துத் தமிழச்சி ஆனால் இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் நுழைந்த முதல் நாளே ஆர்மி உருவானது. கொஞ்சும் தமிழால் அனைவரை மனதையும் கொள்ளை அடித்துச் சென்றார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் இவருக்கு தமிழில் மூன்று படங்களில் நாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் தற்போது லாஸ்லியா ஆச்சி நிறுவனத்தின் சோப்பு விளம்பரத்தில் நடித்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகிறது.
இந்த சோப்பு விளம்பரத்தில் லாஸ்லியா செம அழகாக உள்ளார். இதோ அந்த வீடியோ