நடிகை லாஸ்லியாவின் தந்தை திடீர் மரணம் - வருத்தத்தில் ரசிகர்கள் | Losliya Father Died

Cheran Condolence to Losliya Father Death : தமிழ் சின்னத்திரை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது செய்தது போட்டியாளராக பங்கேற்று ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் லாஸ்லியா.

இலங்கையைச் சார்ந்த ஈழத்துத் தமிழச்சியான இவரின் தந்தை மரியநேசன் அவர்கள் மாரடைப்பு காரணமாக நேற்று மரணமடைந்தார். இவருடைய மறைவில் லாஸ்லியா ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை லாஸ்லியாவின் தந்தை திடீர் மரணம் - வருத்தத்தில் ரசிகர்கள்

ரசிகர்கள் பலரும் லாஸ்லியாவின் தந்தை மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

இந்தநிலையில் இயக்குனரும், பிக் பாஸ் போட்டியாளருமான சேரன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் லாஸ்லியா.. தந்தையின் மேல் எத்தனை அன்பும், கனவும் வைத்திருந்தாய் என்பது நன்றாக தெரியும். இந்த செய்தி என்னையே உலுக்குகிறது. எப்படித்தாங்குவாய் மகளே. சொல்ல முடியாத துயரில் துடிக்கும் உனக்கும் குடும்பத்துக்கும் எப்படி ஆறுதல் சொல்வதென தெரியவில்லை. ஆழ்ந்த அனுதாபங்கள். @Losliyamaria96 என தெரிவித்துள்ளார்.