Losliya Father Death Photos

இறந்த ஒரு மாதத்திற்கு பின்பு லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

Losliya Father Death Photos : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக லாஸ்லியா பங்கேற்றார்.

இந்த நிகழ்ச்சி மூலமாக அவருக்கென தனி ரசிகர் பட்டாளம் உருவானது. இவர் தற்போது தமிழில் மூன்று படங்களில் நாயகியாக கமிட்டாகி நடித்து வருகிறார்.

இப்படியான நிலையில் தான் கடந்த மாதம் லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் கனடாவில் மாரடைப்பால் உயிரிழந்தார்.

கரோனா வைரஸ் தொற்று காரணமாக அவரது உடல் இலங்கை கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டது. ஒரு வழியாக ஒரு மாதத்திற்கு பிறகு அவரது உடல் இலங்கை கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

மரியநேசனின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.