Losliya
லாஸ்லியாவின் அப்பா கவினுக்கு ஒரு ஸ்ட்ரிக்ட் கண்டிஷனுடன் காதல் பரிசோதனை டெஸ்ட் வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டவர்களில் அதிகம் பேசப்பட்டவர்கள் கவின், லாஸ்லியாவும் அவர்களது காதலும் தான்.

பிக் பாஸ் வீட்டிற்குள் விழுந்து விழுந்து காதலித்து வந்த இவர்களின் காதலுக்கு லாஸ்லியாவின் தந்தை எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியதும் இவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் தொடர்பில்லாதது போலவே இருந்து வந்தனர். இதற்கான காரணம் என்ன என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

கவின் லாஸ்லியாவின் அப்பாவிடம் பேச முயற்சித்த போது அவர் ஒரு வருஷத்துக்கு நீங்க இருவரும் நெருக்கம் காட்டாமல் இதே காதலுடன் இருந்து காட்டுங்கள். உங்கள் காதலை நம்பறேன் என கூறியதாக கூறப்படுகிறது.

இதனால் கவினும் லாஸ்லியாவும் தங்களது காதலை நிரூபிக்கவே தள்ளி இருந்து வருவதாக கூறப்படுகிறது. ஒரு வருடம் கழித்து இவர்களது காதலின் வலிமையை நிரூபித்து கரம் பிடிப்பார்களா? மாட்டார்களா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.