நிகழ்ச்சி ஒன்றில் சேரனை பற்றி கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறி இறுதியில் அவர் சொன்ன பதில் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
தமிழ் சின்னத்திரையில் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர் லாஸ்லியா. இந்த நிகழ்ச்சியில் சேரனும் கலந்து கொண்டிருந்தார். சேரன் லாஸ்லியாவை தன்னுடைய மகளாக பார்த்தது நாம் அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் லாஸ்லியா சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது தொகுப்பாளர் சேரனின் பிறந்த நாள் எப்போது என கேட்டார்.
அதற்கு லாஸ்லியா பதில் சொல்ல முடியாமல் திணறி இறுதியில் தெரியவே தெரியாது என கூறியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சாக்ஷி அகர்வால் கூட சேரனின் பிறந்த நாளுக்கு கேக்குடன் சென்று ஷாக் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.