Ajith Kumar
விரைவில் சினிமாவில் இருந்து விலகிடுவேன் என பிரபல நடிகரிடம் அஜித் கூறிய அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவருக்கென பல ரசிகர்கள் உள்ளனர். திரையுலக பிரபலங்கள் அளிக்கும் பேட்டிகளிலும் அஜித்தை பற்றி பேசாமல் இருக்க மாட்டார்கள்.

அப்படி தான் லொள்ளு சபா சாமிநாதனும் பேட்டி ஒன்றில் அஜித்தை பற்றி பேசியுள்ளார். அதாவது விவேகம் படத்தில் நான் அஜித்துடன் சேர்ந்து நடித்து கொண்டிருந்தேன்.

அப்போது ஒரு நாள் அவர் என்னை அழைத்து எவ்வளவு படங்களில் நடித்திருக்கிறீர்கள் என்று விசாரித்தார். நான் 500 படங்களில் நடித்திருக்கிறேன் என கூறினேன்.

அதன் பின்னர் அஜித் நான் விரைவில் சினிமாவை விட்டு விலகிடுவேன், மக்கள் இவன் வேண்டாம் என முடிவு செய்வதற்குள் நாமே விலகி கொள்ள வேண்டும் என கூறியதாகவும் உடனே நான் சார் அப்படியெல்லாம் பண்ணிடாதீங்க, உங்க படங்களுக்காக ரசிகர்கள் காத்துகிட்டு இருக்கிறார்கள் என கூறியதாக பேசியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.