கையில் காப்புடன் தளபதி 67 பட லுக்கில் விஜய் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் லோகேஷ் கனகராஜ்.

Lokesh With Vijay in Thalapathy 67 Look : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் வாரிசு. வம்சி இயக்கத்தில் வெளியான இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 67 படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் சென்னையில் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானதை தொடர்ந்து தளபதி விஜய் கையில் காப்புடன் இருக்கும் புகைப்படத்தை லோகேஷ் கனகராஜ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகிறது.