Lokesh pop
திடீரென ஏற்பட்ட பக்கவாதத்தால் பிரபல சன் டிவி தொகுப்பாளர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Lokesh Pop in Hospital : தமிழ் சின்னத்திரையில் சன் நெட்ஒர்க் சேனலில் பணியாற்றி வருபவர் லோகேஷ் பாப். பார்ப்பதற்கு குண்டாக இருப்பார், பெரும்பாலான தொலைக்காட்சி ரசிகர்களுக்கு இவரை தெரிந்திருக்கும்.

நயன்தாரா, விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான நானும் ரவுடி தான் படத்தில் கூட சிறு வேடத்தில் நடித்திருந்தார்.

சுதா கொங்கராவும் இல்ல.. சன் பிக்சர்ஸும் இல்ல?? – தளபதி 65 இயக்குனர், தயாரிப்பு நிறுவனம் இது தானா?

தற்போது இவருக்கு திடீரென பக்கவாதம் ஏற்பட்டு இடது கை மற்றும் இடது கால் செயலிழந்துள்ளது. மேலும் அவரின் சிகிச்சைக்காக ரூ 7 லட்சம் வரை தேவைப்படுகிறதாம்.

இது பற்றி பதிவிட்டு முகநூல் பக்கத்தில் உதவி கேட்டுள்ளார் கலக்க போவது யாரு திருச்சி சரவண குமார்.