
பக்கா பிளான் உடன் களமிறங்கி உள்ளார் லோகேஷ் கனகராஜ்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கி வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான வாரிசு படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் தளபதி 67 படத்தில் நடித்த தொடங்கியுள்ளார்.

7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்க திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், கௌதம் மேனன், சஞ்சய் தத் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் இந்த படத்தில் நடிக்க உள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக எகிறி உள்ளது.
கடந்த இரண்டு தினங்களாக படத்தில் அப்டேட்டுகளை அடுத்தடுத்து வெளியிட்டு வருகிறது தயாரிப்பு நிறுவனம். அதோடு இந்த படத்தில் பூஜை வீடியோவையும் வெளியிட்டு லைக்குகளை அள்ளி வருகிறது. இப்படியான நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவலும் வெளிவந்துள்ளது.

அனைத்தையும் பக்காவாக பிளான் செய்து களத்தில் இறங்கியுள்ளார் லோகேஷ் கனகராஜ். ஆமாம் இந்த படத்தை வரும் அக்டோபர் 19ஆம் தேதி ஆயுத பூஜை விடுமுறையில் வெளியிட லோகேஷ் கனகராஜ் முடிவு எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தயார் நிலையில் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது அதற்கு ஏற்றார் போல அனைத்து வேலைகளையும் கச்சிதமாக முடிக்க பட குழு தயார் நிலையில் இருப்பதாக தெரியவந்துள்ளது.