Lokesh Kanagaraj Next Movie

லோகேஷ் கனகராஜ் அடுத்த படம் பற்றி அதிரடியான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Lokesh Kangaraj Next Movie Update : தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். குறும்படங்களை இயக்கி அதன்பன்னர் மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானார்.

மாநகரம் படத்தை தொடர்ந்து கைதி என்ற வெற்றிப் படத்தைக் கொடுத்தார். இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இதனைத் தொடர்ந்து தற்போது தளபதி விஜயை வைத்து மாஸ்டர் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார் திரைப்படம் உலகம் முழுவதும் ஜனவரி 13-ஆம் தேதி வெளியாக உள்ளது.

ரசிகர்களை மேலும் இப்படத்திற்காக ஆவலோடு காத்திருக்கும் இந்த வேளையில் லோகேஷ் கனகராஜ் பேட்டி ஒன்றில் தன்னுடைய அடுத்த படம் பற்றி பேசியுள்ளார்.

அதாவது தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகரான ராம் சரணுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவித்துள்ளார்.

கமல் ஹாசன் நடிப்பில் உருவாகவுள்ள விக்ரம் திரைப்படத்தை முடித்த பிறகு மீண்டும் இது குறித்து யோசிக்க உள்ளதாகவும் OTT தளத்திலும் படத்தை இயக்கும் எண்ணம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.